Posts

Showing posts with the label மது_ஒழிப்பு

அவன் பயத்துக்கே பயம் காட்றவன்!!!.. ’கட்டிங்’ கேட்டு கரண்ட் கம்பத்தில் தியானம் செய்த வாலிபர்

Image
  புத்தாண்டு குடிகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது என சிலர் புலம்புவதை அவ்வப்போது கேட்கலாம். அதுவும் ஓரளவு உண்மைதான் என்பதை மெய்ப்பிப்பது போல், ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடிக்க பணம் கேட்டு தராததால், குடிமகன் ஒருவர் கரண்ட் கம்பத்தில் ஏறி பேசுபொருளாகியுள்ளது.. தமிழ்நாடு என்றில்லை மது விற்கும் பல மாநிலங்களில் அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு அலப்பறை செய்யும் குடிமகன்களால் பொதுமக்கள் கடும் இன்னலை சந்திக்கின்றனர். மேலும் சாலைகளில் அவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இருக்காது. ஒவ்வொரு நாளும் மது அருந்திவிட்டு குடிமகன்கள் செய்யும் அட்டகாசத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்திருக்கும் நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளது. குடிமகன்கள் அட்டகாசம் :  கட்டாந்தரையில் நீச்சல் அடிப்பது, ஓடும் பஸ்ஸை முட்டி நிறுத்துவது, நாய்களை கட்டிப்பிடித்து தூங்குவது என குடிமகன்களின் பல்வேறு அட்டகாசங்களை பார்த்திருப்போம். குறிப்பாக தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற நாட்களில் குடிப்பதற்கு என்றே ஒதுக்கப்பட்டது போல சிலர் காலை முதல் இரவு வரை மதுவில் குளிக்கின்றன...