Posts

Showing posts with the label மது குடிக்கும் பழக்கம்

குடிபோதையில் அக்கா மகனை அடித்து கொன்ற இளைஞர்.. போதை தெளிந்ததும் தானும் தூக்கிட்டு தற்கொலை

Image
  குடிபோதையில் ஏற்பட்ட விபரீதம் தேனி பெரியகுளம் அருகே கீழவடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி ஆனந்தி. இவர்களுக்கு நிசாந்த் என்ற 14 வயது மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர் நிஷாந்த் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்களின் தந்தை செல்லத்துரை இறந்துவிட்டார். இதையடுத்து ஆனந்தி கூலி வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். வறுமை காரணமாக மகளை உசிலம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைத்து வந்துள்ளார். ஆனந்தி வீட்டில் அவருடைய உடன்பிறந்த தம்பி பாண்டீஸ்வரனும் சேர்ந்து வசித்து வந்துள்ளார். 33 வயதான அவருக்கு திருமணம் ஆகவில்லை. மதுபோதைக்கு அடிமையான ஆனந்தியின் தம்பி பாண்டீஸ்வரன் அடிக்கடி அக்காவிடம் பணம் கேட்டு தகராறு செய்துவந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் அக்கா ஆனந்தியை எழுப்பி மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனந்தி பணம் இல்லை எனக் கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால்  ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரன் இரும்பு கம்பியால் ஆனந்தியின் தலையில் கடுமையாக தாக்கியதில் ஆனந்தி மயக்கமடைந்துள்ளார். தூங்கி கொண்டி...