தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகள் – மக்கள் எப்படி போதை பழக்கத்திலிருந்து மீள முடியும்?
தமிழ்நாட்டில் டாஸ்மாக் (TASMAC) கடைகளின் எண்ணிக்கை காலங்காலமாக மாறினாலும், 2023 அரசு தகவல்படி 5,329 கடைகள் செயல்பட்டன. பின்னர் 500 கடைகளை மூடும் முடிவு எடுக்கப்பட்டதால், தற்போது 5,000-க்கும் மேல் செயல்பட்டு வருகின்றன. இத்தனை கடைகள் உள்ள சூழலில், மக்கள் மதுபான பழக்கத்திலிருந்து மீள்வது ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது. ஆனால் சரியான உதவி, விழிப்புணர்வு, சிகிச்சை என்ற மூன்று வழிகளின் மூலம் போதை பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட முடியும். 1. டாஸ்மாக் கடைகள் அதிகமாக இருந்தாலும், மீட்பு சாத்தியமே தமிழகத்தில் மதுபான கடைகள் அதிகரிப்பது மக்கள் மதுவுக்கு அடிமையாகும் வாய்ப்பை உயர்த்துகிறது. ஆனால் அதே நேரத்தில், Deaddiction treatment center , Alcohol Awarness Program போன்றவை அதிகரித்துள்ளதால், மீட்பு முறை எளிதாகியுள்ளது. சரியான வழிகாட்டுதலுடன், பல ஆயிரக்கணக்கான மக்கள் மதுவிலக்கை அடைந்துள்ளனர். 2. போதை பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி? – நடைமுறை வழிகள் • போதை மறுவாழ்வுக் காப்பகம் • ஆலோசனை (Counselling) மற்றும் மனநல சிகிச்சை • குடும்ப ஆதரவு • குழு சிகிச்சை (Group Therapy) 3. மது...