சவுதி அரேபியாவில் மதுபானம் தடை செய்யப்பட்டது ஏன்? 1951ல் அரச குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம்..
சவுதி அரேபியாவில் மதுபானத் தடை 1952-ல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதன் பின்னணி 1951-ஆம் ஆண்டு ஜெட்டாவில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதர் சிரில் ஓஸ்மான் இல்லத்தில் நடந்த ஒரு மாலை நேர சந்திப்பில் தொடங்கியது. சொந்த மகன் மதுபோதையில் செய்த தவறுக்காக, ஒட்டுமொத்த நாட்டிற்குள்ளும் மதுபானத்தை தடை செய்தார் சவுதி அரேபியா அரசர். தன் மகனை போல் மதுபோதையில் யாரும் தவறு செய்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர் எடுத்த முடிவு தான் சவுதி அரேபியாவின் வளர்ச்சிக்கும் ஒரு காரணமாக உள்ளது சவுதி அரேபியா தற்போது மதுபானம் தொடர்பான விவகாரத்தில் புதிய முடிவு எடுத்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு மேலான முழுமையான தடைக்குப் பிறகு, சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் மதுபானத்தைப் பயன்படுத்தும் சட்டப்பூர்வ அனுமதியை அந்நாடு வழங்க தொடங்கி உள்ளது. முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்காக அரசு நடத்தும் கடைகள் திறக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, பிரீமியம் குடியிருப்புத் திட்டங்களின் கீழ் உள்ள அதிக வருமானம் ஈட்டும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் கடுமையான ஒழுங்குமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது மேலும், எக்ஸ்போ 2030 மற்றும் 2034 ...