கொரோனா காலத்தில் நடந்த மது விபத்துகள் – விழிப்புணர்வு பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்தில் மூன்று நண்பர்கள் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 29 முதல் 35 வயதுக்குட்பட்ட அவர்கள் தினமும் மது அருந்துபம் பழக்கம் உடையவர்கள். ஏப்ரல் 4 ஆம் தேதியன்று அது கொரோனா ஊரடங்கு காலகட்டம், நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்து இரண்டு வாரங்கள் நெருங்கிவிட்ட நிலையில், அவர்களின் கையில் மது இல்லை. ஆபத்தை உணராத அவர்கள் ஆப்டர் ஷேவ் லோஷனை ஒரு காற்றூட்டப்பட்ட பானத்துடன் கலந்து குடித்துள்ளனர், இச்சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே அவர்கள் வலியால் அலறத் தொடங்கி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் இறந்துவிட்டனர். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு அது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தங்களைப் பாதிக்கும் ஒரு நோய் என்பது தெரியாது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அவர்கள் மதுவை சேமித்து வைத்திருப்பார்கள், சில நாட்களிலேயே அதன் அளவு குறைய தொடங்கிவிடும். ஓரிரண்டு நாட்களில் மது தீர்ந்தவுடன், மதுவின்மீது ஏக்கங்கள் ஏற்படும். மதுவுக்குப் பழகிவிட்டதால் உடல் மது இல்லாமல் செயல்பட முடியாது என்ற எண்ணம் தோன்றும். இதன் காரணமாக அவர்கள...