கொரோனா காலத்தில் நடந்த மது விபத்துகள் – விழிப்புணர்வு பதிவு

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்தில் மூன்று நண்பர்கள் ஒன்றாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 29 முதல் 35 வயதுக்குட்பட்ட அவர்கள் தினமும் மது அருந்துபம் பழக்கம் உடையவர்கள்.


ஏப்ரல் 4 ஆம் தேதியன்று அது கொரோனா ஊரடங்கு காலகட்டம்,  நாடு தழுவிய ஊரடங்கு அமலுக்கு வந்து இரண்டு வாரங்கள் நெருங்கிவிட்ட நிலையில், அவர்களின் கையில் மது இல்லை. ஆபத்தை உணராத அவர்கள் ஆப்டர் ஷேவ் லோஷனை ஒரு காற்றூட்டப்பட்ட பானத்துடன் கலந்து குடித்துள்ளனர், இச்சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே அவர்கள் வலியால் அலறத் தொடங்கி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவர் இறந்துவிட்டனர்.


மதுவுக்கு அடிமையானவர்களுக்கு அது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தங்களைப் பாதிக்கும் ஒரு நோய் என்பது தெரியாது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அவர்கள் மதுவை சேமித்து வைத்திருப்பார்கள், சில நாட்களிலேயே அதன் அளவு குறைய தொடங்கிவிடும். ஓரிரண்டு நாட்களில் மது தீர்ந்தவுடன், மதுவின்மீது ஏக்கங்கள் ஏற்படும். மதுவுக்குப் பழகிவிட்டதால் உடல் மது இல்லாமல் செயல்பட முடியாது என்ற எண்ணம்  தோன்றும். இதன் காரணமாக அவர்கள் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.


இதே காலகட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் அங்கு உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து மது பாட்டில்களைத் திருடிய ஆறு பேரைக் கைது செய்தனர். மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 16 கடைகளில் இருந்து மது பாட்டில்களைப் பாதுகாப்பதற்காக காவல்துறையினர் அவற்றை சமூக மற்றும் திருமண மண்டபங்களுக்கு மாற்றினார்கள்.


கொரோனா காலகட்டங்களில் டாஸ்மாக்களைத் திறப்பது என்பது சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதை நன்கு அறிந்த தமிழக அரசு மதுக்கடைகளை காலவரையின்றி மூடியது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் மது அருந்துபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்ன செய்ய முடியும் என்பது குறித்த alcohol awarness program நடத்த வேண்டும்.


இதுமாதிரியான குடிப்பழக்கம் போன்ற அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக விடுதலைபெற திண்டுக்கல்லில் உள்ள Brindhavan Deaddiction Centre-ஐ அணுகவும்


For more details : brindhavan deaddiction Center brindhavandeaddiction.org +91 88700 95517


#போதைவிடுப்பு
#போதைஒழிப்பு
#மதுவிலக்கு
#போதைமருவாழ்வு
#டாஸ்மாக்
#தமிழ்நாடு
#மதுபழக்கம்
#மறுவாழ்வுமையம்
#திண்டுக்கல்
#பிருந்தாவன்போதைஒழிப்புமையம்

#deaddiction
#rehabilitation
#addictionrecovery
#alcoholfree
#drugfree
#mentalhealthsupport
#deaddictioncentre
#brindhavandeaddictioncentre
#dindigul

Comments

Popular posts from this blog

What Makes Alcohol De-Addiction Treatment Effective for Lasting Change?

Why Professional Support at De-Addiction Centers is Key to Lasting Sobriety

Looking for an Addiction Center Near Dindigul to Help a Loved One?