சவுதி அரேபியாவில் மதுபானம் தடை செய்யப்பட்டது ஏன்? 1951ல் அரச குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம்..

 


சவுதி அரேபியாவில் மதுபானத் தடை 1952-ல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதன் பின்னணி 1951-ஆம் ஆண்டு ஜெட்டாவில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதர் சிரில் ஓஸ்மான் இல்லத்தில் நடந்த ஒரு மாலை நேர சந்திப்பில் தொடங்கியது. சொந்த மகன் மதுபோதையில் செய்த தவறுக்காக, ஒட்டுமொத்த நாட்டிற்குள்ளும் மதுபானத்தை தடை செய்தார் சவுதி அரேபியா அரசர். தன் மகனை போல் மதுபோதையில் யாரும் தவறு செய்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர் எடுத்த முடிவு தான் சவுதி அரேபியாவின் வளர்ச்சிக்கும் ஒரு காரணமாக உள்ளது


சவுதி அரேபியா தற்போது மதுபானம் தொடர்பான விவகாரத்தில் புதிய முடிவு எடுத்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு மேலான முழுமையான தடைக்குப் பிறகு, சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் மதுபானத்தைப் பயன்படுத்தும் சட்டப்பூர்வ அனுமதியை அந்நாடு வழங்க தொடங்கி உள்ளது. முஸ்லீம் அல்லாத தூதரக அதிகாரிகளுக்காக அரசு நடத்தும் கடைகள் திறக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, பிரீமியம் குடியிருப்புத் திட்டங்களின் கீழ் உள்ள அதிக வருமானம் ஈட்டும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் கடுமையான ஒழுங்குமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது


மேலும், எக்ஸ்போ 2030 மற்றும் 2034 பிபா உலகக்கோப்பை போன்ற சர்வதேச திருவிழாவை முன்னிட்டு, குறிப்பிட்ட சுற்றுலா மண்டலங்களிலும் மது விற்பனைக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனினும், இந்த மாற்றங்கள் ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட தடையை முழுமையாக நீக்கிவிடவில்லை. சவுதி அரேபியாவில் மதுபானம் ஏன் இவ்வளவு கடுமையான கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள, நாம் மதத்தைத் தாண்டி, அந்நாட்டின் வரலாற்றையே மாற்றிய ஒரு சம்பவம் தான் காரணம். சவுதி அரேபியாவில் மதுபானத் தடை 1952-ல் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதன் பின்னணி 1951-ஆம் ஆண்டு ஜெட்டாவில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதர் சிரில் ஓஸ்மான் இல்லத்தில் நடந்த ஒரு மாலை நேர சந்திப்பில் தொடங்கியது. ஓஸ்மான் அங்கு ஒரு விருந்தளிப்பவராகவும், மது அருந்துபவர்களுக்கு நல்ல தோழராகவும் அறியப்பட்டார். அன்றைய மாலை விருந்தில், அதிகப்படியாக மது அருந்திய சவுதி இளவரசர் மிஷாரி பின் அப்துல் அஜிஸ், அங்கிருந்த ஒரு ஆங்கிலேயப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.


வரம்பு மீறிய சவுதி இளவரசர் சவுதி இளவரசர் 

மிஷாரியின் நடத்தை வரம்பு மீறியபோது, ஓஸ்மான் அவருக்கு மேற்கொண்டு மது வழங்க மறுத்து, அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியிருக்கிறார். இதனால் அவமானமடைந்தும் ஆத்திரமடைந்தும் 19-வயது இளவரசர் அங்கிருந்து வெளியேறினார். அடுத்த நாள், மது போதை இன்னும் தெளியாத நிலையில், ஆவேசத்துடன் ஓஸ்மானின் வீட்டிற்குத் திரும்பிய மிஷாரி, அந்தப் பெண்ணையும் மதுவையும் தருமாறு மிரட்டினார். மீண்டும் ஓஸ்மான் அவரை வெளியேற்ற முயன்றபோது, மிஷாரி தனது துப்பாக்கியால் சுட்டார். இதில் துணைத் தூதர் ஓஸ்மான் கொல்லப்பட்டார், அவரது மனைவி காயமடைந்தார்.


மன்னர் அப்துல் அஜிஸின் அதிரடி முடிவு 


இந்தக் கொலைச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒரு தூதரகச் சிக்கல் மட்டுமல்லாமல், அரச குடும்பத்திற்குப் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தி தந்தது. மதுபானம் எவ்வாறு மனிதர்களைக் கட்டுக்கடங்காமல் ஆக்குகிறது என்பதையும், அது வெளிநாட்டு உறவுகளை எப்படிப் பாதிக்கிறது என்பதையும் இச்சம்பவம் சவுதி மன்னருக்கு உணர்த்தியது.


மன்னர் கடும் கோபம் 


இளவரசர் மிஷாரியின் செயலால் மன்னர் அப்துல்அஜிஸ் (இபின் சவுத்) கடும் கோபமடைந்தார். அவர் தனது மகனைக் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட ஓஸ்மானியின் மனைவியிடம் இளவரசருக்கு என்ன மாதிரியான மரண தண்டனை வழங்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்; அவனது தலையைத் துண்டித்து பிரிட்டிஷ் தூதரகத்தின் முன்னால் கம்பியில் குத்தி வைக்கிறேன்" என்று உறுதி அளித்திருக்கிறார். ஆனால் அவர் அதை மறுத்துவிட்டு, 70,000 டாலர் இழப்பீட்டை மட்டும் ஏற்றுக்கொண்டார்.


மாதம் 20 சவுக்கடி 


காலப்போக்கில், மரண தண்டனையைச் சிறைத்தண்டனையாகவும், மாதம் 20 கசையடிகளாகவும் மன்னர் மாற்றினார். இந்தத் தவறுக்குத் தன் மகனை விட, மேல்தட்டு மக்களிடையே ஊடுருவிய 'மேற்கத்தியப் பழக்கவழக்கங்கள்' (குறிப்பாக மது அருந்துதல்) தான் காரணம் என்று மன்னர் முடிவு செய்தார்.


முற்றிலும் மறைந்தன 


ஓராண்டுக்குள், சவுதி அரேபியா முழுவதும் மதுபான இறக்குமதி, விற்பனை மற்றும் நுகர்வுக்குத் தடை விதிக்கும் ஆணையை அவர் பிறப்பித்தார். 1952-ஆம் ஆண்டின் இறுதியில், அந்நாட்டில் மதுபானங்கள் முற்றிலும் மறைந்தன. அரேபிய-அமெரிக்க எண்ணெய் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் மாதம் மூன்று பாட்டில்கள் என வழங்கப்பட்டு வந்த மதுபானமும் நிறுத்தப்பட்டு, சவுதி அரேபியா முழுமையான மதுவிலக்கு நாடாக மாறியது.


நீங்களும் தீராத மதுப்பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபட விரும்பினால்  Brindhavan Alcohol And Drug Rehabilitation Center In Dindigul -ஐ அணுகவும்


For more details :

brindhavan deaddiction Center

brindhavandeaddiction.org

+91 88700 95517


#மது_விடுவிப்பு
#மது_அடிமை_சிகிச்சை
#மதுவிலக்கு_மையம்
#போதை_மறுவாழ்வு_மையம்
#போதை_அடிமை_சிகிச்சை
#மருந்து_அடிமை_விடுவிப்பு
#மது_சிகிச்சை_தமிழ்நாடு
#போதை_மீட்பு
#போதை_இல்லா_வாழ்க்கை
#மீட்பு_வாழ்க்கை
#மது_விலக்கு
#போதை_பழக்கம்_விடு
#ஆரோக்கிய_வாழ்க்கை
#குடும்பம்_காப்போம்
#போதை_எதிர்ப்பு

#AlcoholDeAddictionMadurai
#DrugDeAddictionCentre
#BestRehabNearMe
#AlcoholTreatmentCentreTamilNadu
#DeAddictionTreatmentTamilNadu
#AlcoholRecoveryIndia
#DrugRehabTamilNadu
#AddictionTreatmentIndia
#RehabCareTamilNadu
#SubstanceAbuseTreatment
#AlcoholAddictionHelp
#DrugAddictionRecovery
#ProfessionalRehabCare
#AddictionFreeLife

Comments

Popular posts from this blog

Services in Brindhavan deaddiction centre

What Makes Alcohol De-Addiction Treatment Effective for Lasting Change?

Why is it important to seek professional help at a de addiction centre for drug de addiction or alcohol addiction treatment? A De Addiction Treatment Centre is a crucial facility designed to help individuals struggling with addiction regain control of their lives. Whether it's drug de addiction or alcohol addiction treatment, such centres provide a safe, supportive, and therapeutic environment. These centres offer specialized programs for people battling deaddiction, aiming to guide them through their recovery process and towards a healthier lifestyle. As the saying goes, "Say no to drugs" seeking professional help at a de addiction centre is the first step toward recovery. The primary goal of any de addiction facility is to help individuals break free from the hold of addiction. Deaddiction therapy is at the core of these treatment centres, designed to address both the physical and psychological aspects of addiction. In a de addiction centre in Dindigul, various therapeutic methods are used to help individuals cope with the cravings and withdrawal symptoms associated with addiction. These treatments include counseling, group therapy, and sometimes medication to ensure a holistic recovery approach. With the right support, patients are empowered to overcome their addiction and rebuild their lives. As an old adage reminds us, "Addiction is a disease, not a choice." One of the key components of an alcohol deaddiction centre is detoxification, followed by ongoing therapy. Alcohol addiction can have severe long-term effects on health, and specialized treatment is required to help individuals safely withdraw from alcohol. Alcohol addiction treatment in Dindigul is tailored to each person’s needs, ensuring that they receive the right level of care and attention. In these centres, professional counselors and medical staff provide the guidance and supervision required for detoxification and rehabilitation, making the recovery process safer and more effective. "The first step to recovery is admitting you have a problem" and these centres provide the support needed at every step. The de addiction treatment centre also emphasizes emotional and mental healing. Addiction often stems from deep emotional and psychological struggles, and effective therapy addresses these root causes. Through deaddiction therapy, individuals can confront underlying issues such as stress, trauma, and anxiety, which may have led to substance abuse. Therapeutic techniques such as Cognitive Behavioral Therapy (CBT) and mindfulness training are used to help individuals manage their emotions, reduce stress, and build healthier coping mechanisms. As we often hear, "Recovery is hard, but so is living in addiction." Finally, the success of a de addiction centre lies in its aftercare programs. Once a person has completed their initial treatment, continuous support is essential for maintaining sobriety. Regular follow-ups and outpatient services at a de addiction centre ensure that individuals stay on track. Remember, "It’s not how you start, it’s how you finish" and with the right care, individuals can continue their journey toward a life free of addiction.