குடிபோதையில் அக்கா மகனை அடித்து கொன்ற இளைஞர்.. போதை தெளிந்ததும் தானும் தூக்கிட்டு தற்கொலை

 



குடிபோதையில் ஏற்பட்ட விபரீதம் தேனி பெரியகுளம் அருகே கீழவடகரை அழகர்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி ஆனந்தி. இவர்களுக்கு நிசாந்த் என்ற 14 வயது மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்

நிஷாந்த் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே இவர்களின் தந்தை செல்லத்துரை இறந்துவிட்டார். இதையடுத்து ஆனந்தி கூலி வேலைக்கு சென்று பிள்ளைகளை வளர்த்து வந்துள்ளார். வறுமை காரணமாக மகளை உசிலம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படிக்க வைத்து வந்துள்ளார்.


ஆனந்தி வீட்டில் அவருடைய உடன்பிறந்த தம்பி பாண்டீஸ்வரனும் சேர்ந்து வசித்து வந்துள்ளார். 33 வயதான அவருக்கு திருமணம் ஆகவில்லை. மதுபோதைக்கு அடிமையான ஆனந்தியின் தம்பி பாண்டீஸ்வரன் அடிக்கடி அக்காவிடம் பணம் கேட்டு தகராறு செய்துவந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் அக்கா ஆனந்தியை எழுப்பி மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனந்தி பணம் இல்லை எனக் கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால்  ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரன் இரும்பு கம்பியால் ஆனந்தியின் தலையில் கடுமையாக தாக்கியதில் ஆனந்தி மயக்கமடைந்துள்ளார்.


தூங்கி கொண்டிருந்த நிஷாந்த் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது அம்மா தாக்கப்பட்டு கிடந்ததால் ஆத்திரமடைந்து , மாமாவிடம் சண்டை போட்டுள்ளார். ஏற்கெனவே மதுபோதையில் இருந்த பாண்டீஸ்வரன், நிஷாந்த்தையும் இரும்பு கம்பியால் பலமாக தாக்கியுள்ளார். தலையில் அடிபட்டதில் அதிக ரத்தம் வெளியேறி நிஷாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சிறிது நேரத்தில் மதுபோதை தெளிந்த பாண்டீஸ்வரன் தான் செய்த தவறை உணர்ந்து, அக்காவின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


குடிப்பழக்கம் ஒரு மனிதனை சாவின் விளிம்பிற்கு கூட கொண்டுசெல்லும் என்பதற்கு இந்த உண்மை சம்பவமே சான்று. இது போன்ற குடிப்பழக்கத்திற்கு அடிமையான நபர்கள் அதிலிருந்து விடுபட்டு அவர்களின் வாழ்க்கை பிரகாசனமாக அமைய De Addiction Centre In Dindigul ஒரு நல்ல தீர்வாக அமையும்


For more details : brindhavan deaddiction Center brindhavandeaddiction.org +91 88700 95517 #குடிப்பழக்கம் #மது_அடிமை #மது_அடிமைத்தனம் #மது_ஒழிப்பு #போதை_ஒழிப்பு #போதை_மறுவாழ்வு #குடி_குடும்ப_அழிவு #குடி_வாழ்க்கை_அழிவு #மது_கொலை #உண்மை_சம்பவம் #சமூக_விழிப்புணர்வு #குடி_விலகல் #போதை_விலகல் #மனித_மதிப்பு #குடும்பம்_காப்போம் #AlcoholAddiction #AlcoholKills #SayNoToAlcohol #StopDrinking #AddictionAwareness #DeAddiction #AlcoholAbuse #FamilyDestruction #LifeMatters #BreakTheAddiction #AddictionRecovery #DeAddictionCentreInDindigul #DindigulDeAddiction #AlcoholRehab #RehabCenter #AddictionTreatment #RecoverLife #HopeAfterAddiction

Comments

Popular posts from this blog

What Makes Alcohol De-Addiction Treatment Effective for Lasting Change?

How does Brindhavan’s personalized treatment approach help individuals recover from drug addiction?

Looking for an Addiction Center Near Dindigul to Help a Loved One?