குடிபழக்கத்தால் வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் தகராறு செய்த இளைஞரை கண்டித்த மாமியார் வெட்டிக்கொலை
நெல்லை சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த துர்காதேவி கீழச்செவலைச் சேர்ந்த ஆறுமுகநயினார் என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆறுமுகநயினாருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால், சரியாக வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மனைவியை அடித்து துன்புறுத்தி பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைப்பதும் பின்னர் அவர்கள் சமரசம் செய்து வைப்பதும் வழக்கமாக நடந்து வந்துள்ளது.
இதனால் ஆறுமுகநயினாரின் மாமியாரான வள்ளியம்மாள் அவரை அடிக்கடி கண்டித்து வந்துள்ளார். இந்த நிலையில், குடிப்பழக்கத்தால் மீண்டும் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து துர்காதேவி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில், நவம்பர் 1, 2025 அன்று மாலை ஆறுமுகநயினார் தனது மனைவியை பார்ப்பதற்காக துர்காதேவியின் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முற்றத்தில் படுத்திருந்த வள்ளியம்மாள், ஆறுமுகநயினாரை அவதூறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த ஆறுமுகநயினார், மது குடித்திருந்ததால் போதையில் அரிவாளால் வள்ளியம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில், அவருக்கு தலை, வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதை தடுக்கவந்த துர்காதேவியையும் அரிவாளால் தாக்கியதால் அவர் காயமடைந்தார்.
வள்ளியம்மாள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது மகள் துர்காதேவி போனில் தந்தை செல்லப்பாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார் . இதையடுத்து அவசர அவசரமாக செல்லப்பா வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் அங்கு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது செல்லப்பாவிடம் போனில் பேசிய அவரது மருமகன் ஆறுமுகநயினார், “என்ன மாமா எப்படி இருக்கீங்க? வீட்டுக்குப் போனீங்களா ஏதும் விசேஷம் உண்டா?” என விசாரிப்பதுபோல் கேட்டு மாமியார் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முயன்றுள்ளார்.
இதன் பின்னர்தான் தனது மருமகனான ஆறுமுகநயினார் தன் மனைவி வள்ளியம்மாளை கொலை செய்துவிட்டு தப்பியோடியது செல்லப்பாவிற்க்கு தெரிய வந்துள்ளது . விவரம் அறிந்த காவல்துறையினர் வீட்டில் ஹாயாக கட்டிலில் படுத்திருந்த ஆறுமுகநயினாரை கைது செய்துள்ளனர்.
குடிபழக்கம் ஒருவரை, தன் குடும்பத்தினரையே கொலைசெய்யும் அளவிற்கு சுயநினைவை இழக்கசெய்யும் என்பதற்கு இந்த உண்மை சம்பவமே சான்று. இதுபோன்ற தீராத மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட Brindhavan de addiction centre Dindigul -ஐ அணுகவும்
For more details : brindhavan deaddiction Center brindhavandeaddiction.org +91 88700 95517
#மது_அடிமை_அறிகுறிகள்
#தமிழ்நாடு_மது_அடிமை
#மது_விட_உதவி
#மது_பழக்கத்தை_நிறுத்த
#போதை_மீட்பு_நிலைகள்
#போதை_மீட்பு
#மறுவாழ்வு_சிகிச்சை
#உள்நோயாளர்_மறுவாழ்வு
#மது_போதை_சிகிச்சை
#போதை_ஒழிப்பு
#போதை_மறுவாழ்வு_மையம்
#மது_போதை_மீட்பு
#ஆரோக்கிய_வாழ்க்கை
#மனநலம்_மீட்பு
#மது_விலகல்
#symptomsofalcoholaddictionTamilNadu
#howtohelpsomeonequitdrinking
#stagesofaddictionrecovery
#benefitsofinpatientrehab
#AlcoholAddictionTreatment
#DeaddictionTreatmentTamilNadu
#AlcoholRecoverySupport
#InpatientRehabCare
#AddictionRecoveryJourney
#AlcoholWithdrawalHelp
#QuitAlcoholSupport
#MedicalAddictionTreatment
#RehabForAlcoholAddiction
#AlcoholDependenceHelp
#ProfessionalDeaddictionCare

Comments
Post a Comment