குடிபோதையில் ஸ்பூனை விழுங்கிய நபர்; கனவில் விழுங்கியதாக புலம்பல்.. எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் ஸ்பூனை அகற்றிய மருத்துவர்கள்
தாய்லாந்தில் 29 வயதான நபர் ஒருவரின் வயிற்றிலிருந்த கரண்டி(ஸ்பூனை) மருத்துவர்கள் அப்புறப்படுத்தி உள்ளனர். இந்த கரண்டி எப்படி அவரது வயிற்றுக்குள் சென்றது என்று அவர் கூறும் காரணம்தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தாய்லாந்து சேர்ந்த யாங் என்பவர் மதுபோதையில் பீங்கான்(கண்ணாடி) காபி ஸ்பூனை விழுங்கி இருக்கிறார். அதாவது மது அருந்தி கொண்டிருக்கும்போது ஹோட்டல் அறையில் இருந்த ஒரு கரண்டியை வாந்தி எடுப்பதற்காக பயன்படுத்தியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அதனை அவர் விழுங்கியுள்ளார். மதுவினால் சுயநினைவு இல்லாதபோது இது நடந்திருக்கிறது.
ஆறு மாதம் கழித்து அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று யாங் பரிசோதனை செய்து பார்த்த போது அவரது வயிற்றில் 15 சென்டிமீட்டர் கரண்டி இருப்பது தெரியவந்துள்ளது.
யாங் மருத்துவ பரிசோதனைக்கு பின் மருத்துவரிடம் ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.. அந்த விஷயம்தான் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஸ்பூன் விழுங்கியதாக ஆறு மாதத்திற்கு முன்பு கனவு கண்டதாகவும், அது கனவல்ல உண்மை என தற்போது புரிகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மதுப்பழக்கத்தினால் சுயநினைவு இழந்த போது இது நடந்ததாகவும் அவர் கூறுகிறார். ஜூன் 18 அன்று அவருக்கு எண்டோஸ்கோபி எனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஸ்பூன் அகற்றப்பட்டுள்ளது.
மதுப்பழக்கம் ஒருவரின் உயிருக்கே உலைவைத்துவிடும் என்பதற்கு யாங்கின் இந்த உண்மை சம்பவமே சான்று. நீங்களோ அல்லது உங்கள் உறவினர்களோ மது பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறீர்களா. திண்டுக்கல்லில் உள்ள பிருந்தாவன் டீ அடிக்சன் செண்டர் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட உங்களுக்கு நிரந்தர தீர்வை தருகின்றது. உடனடியாக மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட https://brindhavandeaddiction.org/ -ஐ அணுகவும்
For more details : brindhavan deaddiction Center brindhavandeaddiction.org +91 88700 95517
#AlcoholAwareness
#SayNoToAlcohol
#DeaddictionAwareness
#உயிருக்கு_ஆபத்தான_மது
#மது_திருந்து_வாழ்வு
#தாய்லாந்து_சம்பவம்
#HealthAwareness
#RealLifeIncident
#SaveYourLife
#போதை_ஒழிப்பு
#AddictionRecovery
#RehabAwareness
#Dindigul
#BrindhavanDeaddictionCentre
#மது_மறுவாழ்வு
#உடல்நலம்
#MentalHealthAwareness
#StopDrinking
#LifeMatters

Comments
Post a Comment