கூடுதலாக மது குடிக்க கேட்ட நபரை கொன்று புதைத்த சக நண்பர்கள்; கோவை அருகே பரபரப்பு சம்பவம்!



கோயம்புத்தூர்: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை, 3 நண்பர்கள் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூலூர் அருகே காங்கேயம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். மதுரையை சேர்ந்த இவர், சூலூர் காங்கயம்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் காங்கேயம்பாளையம் பகுதியில் நேற்று மாலை நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, மது வாங்க பணம் கொடுப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்ட நிலையில், குடிபோதையில் இருந்த அவரது நண்பர்கள் ரகுபதி வயது 24, முத்துகிருஷ்ணன் வயது 24, கரண் வயது 23 ஆகியோர் சுரேசை மதுபாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் சுரேஷ் கழுத்தில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து குடிபோதையில் இருந்த 3 பேரும் சுரேஷின் உடலை அங்கேயே எரித்து புதைத்துள்ளனர்.

மதுபோதையில் சுரேஷை கொலை செய்த அவரது 3 நண்பர்கள், இன்று பிற்பகல் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்து கொலை சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார்,சம்பவ இடத்திற்கு சென்று எரிந்த நிலையில் இருந்த சுரேஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு சுரேஷின் உடல் கொண்டு செல்ல முடியாத நிலையில் இருந்ததால், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், நேற்று மாலை சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது சுரேஷ் மேலும் மது வாங்க வேண்டும் எனக் கூறி நண்பர்களிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், 3 பேரும் சேர்ந்து காலி மது பாட்டிலை உடைத்து சுரேஷின் கழுத்துப் பகுதியில் தாக்கியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மூன்று பேரும் சேர்ந்து அங்குள்ள விறகுகளை எடுத்து, சுரேஷ் உடல் மீது போட்டு தீ வைத்துள்ளனர். பின்னர் மூன்று பேரும் இன்று பிற்பகல் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை, சக நண்பர்களே கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தீராத மது பழக்கத்தில் இருந்து விடுபட  Brindhavan Deaddiction Treatment Centers In Dindigul-ஐ அனுகவும்


For more details :

brindhavan deaddiction Center

brindhavandeaddiction.org

+91 88700 95517



#AlcoholAddiction
#AlcoholAbuse
#DrunkViolence
#MurderCase
#AddictionAwareness
#SayNoToAlcohol
#DeaddictionCentre
#AddictionRecovery
#BrindhavanDeaddictionCentre
#Dindigul

#கோவை
#கோயம்புத்தூர்
#சூலூர்
#காங்கேயம்பாளையம்
#தமிழ்நாடு_செய்திகள்
#குற்றச்செய்தி
#அதிர்ச்சி_சம்பவம்
#மது_போதையால்
#மது_தகராறு
#மது_பழக்கம்
#கொலை_சம்பவம்
#நண்பர்கள்_தகராறு
#போலீஸ்_விசாரணை
#தமிழ்_நியூஸ்
#BreakingNewsTamil

#Coimbatore
#Sulur
#TamilNaduNews

#CrimeNews 

Comments

Popular posts from this blog

What Makes Alcohol De-Addiction Treatment Effective for Lasting Change?

How does Brindhavan’s personalized treatment approach help individuals recover from drug addiction?

Looking for an Addiction Center Near Dindigul to Help a Loved One?